இராஜினாமா - சர்தார் பட்டேல்
சர்தார் வல்லபாய் பட்டேல்தான் காந்திஜி கொலை செய்யப்படுவதற்கு முன், காந்திஜியைச் சந்தித்த கடைசி மனிதர். அப்போதும்,நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் நடந்த சண்டையைத் தீர்த்து வைத்தார் காந்திஜி.
காந்தியின் கடைசி உண்ணாவிரதத்தை வல்லபாய் பட்டேலும், நேருவும் முடித்துவைக்க வந்திருந்தனர்.
சந்திக்கும்போது கூட காந்திஜி, பிரதமர் நேருவுக்கும் உள்துறை அமைச்சர் (டெபுடி -துணை பிரதம அமைச்சர்) சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் இடையே நடந்த சண்டையைத் தீர்த்து வைத்திட வேண்டியதிருந்தது. பட்டேல், தான் நேருவின் அமைச்சரவையிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
காந்திஜி இப்போது அப்படியொரு இராஜினாமா கூடாது, வேண்டாமென சமாதானப்படுத்தினார்.ஏனெனில் அப்போதுதான் விடுதலைக்குப்பின் முதல் அமைச்சரவை செயலில் வந்திருந்தது.
பட்டேல் அவ்விடமிருந்து அகன்ற அரைமணிநேரத்தில் காந்திஜி கொலை செய்யப்பட்டார்.
காந்திஜியை பட்டேலின் உள்துறை அமைச்சகம் காப்பாற்றிட தவறிவிட்டது, என்று எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். இப்போதும் ஒரு இராஜினாமா கடித மிரட்டல்விட்டார் பட்டேல். ஆனால் இராஜினாமா செய்யவில்லை.
ஹைதராபாத் சமஸ்தான பிரச்சனையில் நேரு,வல்லபாய் பட்டேலை "நீ ஒரு வகுப்புவாதி எனச் சாடினார்" பட்டேல் நேருவை "நீ ஒரு முஸ்லிம்" என பதிலுக்குப் பழித்தார்.இந்தளவுக்கு ஒரு ஒத்துழையாதவரை துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் கொண்டிருந்தார் நேரு.
நேருவை கவிழ்த்துவிட்டு பிரதமராக ஆகிட வேண்டுமென சர்தார் வல்லபாய் பட்டேல் முயற்சி செய்தார் என்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது அப்போது உண்டு!
Source :-
1.“Patel a life” by Rajmohan Gandhi -1990
2. K. K. Nair - No Ill Will to Anyboy
Comments
Post a Comment