அமெரிக்காவில் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராகச் சட்டம்
| Ilham Omar |
உலகில் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளில், பிரச்சாரத்தில் முன்னிலை யில் நிற்பது அமெரிக்கா. இது ஐரோப்பிய நாடுகளுக்கு தலைமையேற்று நிற்பது வெறும் பிரச்சாரத்தோடு நிற்கவில்லை அமெரிக்கா. பல போர் திட்டங்களை வகுத்து அறிவிக்கப்படாத போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா.
இந்தப் போரில் NATO நேட்டோ நாடுகள் எனச் சொல்லப்படும் 57 நாடுகளில்,51 நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு, இந்தப் பெரும்போரை நடத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா! டேவிட் செல்போண் என்பவர், மூன்றாம் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றது, என தன்னுடைய இஸ்லாத்தோடு சண்டையிட்டுத் தோற்றம் (Loosing Battle with Islam) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
ஆனாலும் அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களை அள்ளிக்கொட்டி, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை வளர்த்தது. இதற்காக ஆயிரக்கணக்கான அறக்கட்டளைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இவையெல்லாம் தொடர்ந்து இஸ்லாமோஃபோபியாவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்களே ஒத்துக்கொண்டது போல, ஒரு சாதாரண குடிசைத் தொழிலாகத் தொடங்கப்பெற்ற இஸ்லாமோஃபோபியா இப்போது மிகப்பெரிய ஆலைகளாக ஆலவிருட்சமாகவளர்ந்துள்ளன இதற்காக, இஸ்லாமோஃபோபியாவை வளர்ப்பதற்காக பல லட்சம் டாலர்களை நன்கொடையாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.
சிலபல கார்ப்பரேட்டுகள், தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியையே தருகின்றன.பலநாடுகளில் Corporate Spending for Social Cause பெரிய நிறுவனங்கள் தங்கள் இலாபத்தில் ஒரு பகுதியைச் சமுதாய நலன்களுக்காகச் செலவு செய்திட வேண்டும். அந்தப் பணத்தை அதாவது இலாபத்தின் பங்கை, இந்த இஸ்லாத்தை வெறுக்கும் பிரச்சாரத்தை வளர்க்கும், நிறுவனங்களுக்குத் தருகின்றன. இதனை ஐரோப்பிய நாடுகள் நியாயமான செலவு(Legitimate Spending)எனச் சொல்லுகின்றது. அந்தக் கம்பெனிகளின் கணக்குகளை ஏற்றுக்கொள்கின்றன.
இப்படிப் பணத்தைக் கொட்டி வளர்த்த இஸ்லாமியப் பிரச்சாரம் இன்று நேற்றல்ல,இஸ்லாம் இந்த மண்ணில் காலூன்றிய நாள் முதலே நடக்கின்றன. குறிப்பாக இஸ்லாமிய ஆட்சித் தலைவர் கலீபா உமர் பின் அல் கத்தாப் அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜெரூசலம் அவர்களிடத்திலே, கிறிஸ்தவ பாதிரியார் சோஃபத்நிஸ் அவர்களால் ஒப்படைக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடருகின்றது.
முதல் சிலுவைப்போரை (1095-1247) நடத்துவதற்காக முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்கள், அதில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து, இன்னும் வேகமாகக் களைகட்டிய வெறுப்புகள்,அவிழ்த்துவிடப்பட்ட பொய்கள்,1453இல் கான்ஸ்டாண்டி நோபிளை முஸ்லிம்கள் வெற்றி கண்டபின் வெள்ளை கிறிஸ்தவ உலகில் ஏற்பட்ட விரக்திகள், அந்த விரக்தியின் வெளிப்பாடாய் வெறுப்புப் பிரச்சாரங்கள், ஆயுதந்தாங்கிய ஆக்கிரமிப்பு இஸ்லாத்தின் பூமிகளில், பின் முஸ்லிம்களுக்கிடையில் மூட்டிவிடப்பட்ட சண்டைகள், "Default Wars" எனப் பெயர் வைத்து, முஸ்லிம்களைவிட்டே முஸ்லிம்களைப் பிணமாக்கி வேடிக்கை பார்த்த நிலை.
இதை வைத்துக்கொண்டு முஸ்லிம்களிடையே வளர்த்த விரக்தி! பின்னால் இருக்கும் சதியைப் புரிந்து கொள்ளாமல், முஸ்லிம்களே முஸ்லிம்களைத் திட்டித் தீர்த்தது. இப்படி இஸ்லாமோஃபோபியா கொடிகட்டிப் பறந்தது.
அமெரிக்கா இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்க முஸ்லிம்களும் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள். 9/11 என்று அடையாளப்படுத்தப்படும் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின், முஸ்லிம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல்கள் நடந்தன. அவற்றை "Hate Crimes" வெறுப்பால் ஏற்பட்ட குற்றங்கள் எனப் பதிவுசெய்தார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; என்பதே முஸ்லிம்களின் குற்றச்சாட்டு. முஸ்லிம்கள் இந்த 9/11 தாக்குதலுக்கு எந்தவிதத்திலும் காரணமல்ல. இஸ்லாமும் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களும், இதுபோல அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்க அனுமதிக்கவில்லை. அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பவர்களுக்கு ஏராளமான தண்டனைகள் காத்திருக் கின்றன மரணத்திற்குப் பின்னால் வரும் வாழ்க்கையில் என்பதை நிதானமாக ஆனால் நிரந்தரமாக பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார்கள்.
முதலில் 10 % அமெரிக்கர்கள் மட்டுமே முஸ்லிம்களின் கூற்றை நம்பினார்கள். பெரும்பாலோர் மறுத்தார்கள். முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் - இந்த வெறுப்பு தொழிற் சாலையின் முதலாளிகளும், பங்குதாரர்களும் கடுமையாக முஸ்லிம்களை எதிர்த்தார்கள். வேகமான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
இப்போது - அதாவது தாலிபான்களின் வெற்றிக்குப் பின்னர்,மொத்த அமெரிக்கர்களும் அவர்களுக்குத் துணையாக வந்த ஐரோப்பிய நாடுகளின் மக்களும் அதை நம்பிடவில்லை. இந்நிலையில் சரியான நேரத்தில் அன்புச் சகோதரி இல்ஹாம் உமர் இன்னொரு சகோதரியுடன் இணைந்து ஒரு சட்ட முன்வரைவை அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் 14.12. 2001 இல் கொண்டுவந்தார்.
இந்த சட்ட முன்வரைவு உலகெங்கும் வியாபித்துள்ள இஸ்லாமோஃபோ பியாவுக்கு எதிரானது. இன்னும் ஒருபடி மேலே சென்று சொன்னால் உலகெங்கும் வியாபித்து நிற்கும் இஸ்லாமோஃபோபியாவை தடுக்கும் இல்லை இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்து போரிடும் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார்.
இந்த சட்டத்தை,முதலில் அமெரிக்க அதிபர்,குடியரசுத் தலைவர் ஜோபிடன் பார்வைக்கு கொண்டு சென்றார்கள். அவர் அதற்கான பச்சைக் கொடியை காட்டினார். இதனால் நாடாளுமன்றத்தில் 212 வாக்குகள் பெற்று(219 இல்) சட்டமானது.சட்டம்( H. R.5665) அந்தச் சட்டத்தின் பெயர் : (Combat International Islamophobia Act ) உலக இஸ்லாமிய வெறுப்பிற்கு எதிரான சட்டம்.
முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை என அறியப்படும், பிரதிநிதிகளின் அவையில் (House of Representatives) அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. அடுத்தநாள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மாநிலங் களவை என அறியப்படும் "Senate" செனட் -இல் சமர்ப்பிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானில் வாங்கிய அடி, இவ்வளவு ஆழமாக அமெரிக்காவில் வேலை செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!
அமெரிக்க முஸ்லிம்களின் முன்மாதிரி
அமெரிக்காவில் வாழ்ந்திடும் முஸ்லிம்கள், இந்தியாவில் வாழும் முஸ்லிம் களைப்போல் அல்லது அதிலும் சற்று அதிகமாகவே, இஸ்லாமோஃ போபியாவுக்கும், உடல் ரீதியான தாக்குதலுக்கும் ஆளானார்கள். டிரம்ஃப் அதிபராக இருந்த நாட்களில் அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களுக்கு அளவே இல்லை. டிரம்ஃபின் காலத்தில் பத்து நாளைக்கு ஒரு சட்டம். "ஷரீயாவுக்கு எதிராக", முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப் பட்டுக் கொண்டேயிருந்தன. தாங்கொண்ணா தாக்குதல்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, இறந்தவர்கள் போக உயிரோடு இருப்பவர்கள் முஸ்லிம்கள் மீது நடக்கும், தாக்குதல்கள் அனைத்தையும் தவறாமல் பதிவு செய்தார்கள்.
இலக்கியங்களில் எப்படி இஸ்லாமிய வெறுப்பு விரவி விடப்படுகின்றது, கல்விக்கூடங்களில் ,கல்லூரிகளில் எப்படி இஸ்லாத்தை வெறுக்கும், எதிர்க்கும் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றது, ஊடகங்களில் எப்படி இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுகின்றது, காட்சி ஊடகங்களில், சினிமாக்களில் எப்படி இஸ்லாமோஃபோபியா - இஸ்லாமிய எதிர்ப்பு வளர்க்கப்படுகின்றது என்பதையும் விபரமாக சேகரித்து அமெரிக்கர் களிடையே பிரச்சாரம் செய்தார்கள்.
"(CAIR -Council for American Islamic Relations)" அமெரிக்காவின் இஸ்லாமிய உறவுகளுக்கான குழுமம் என்ற அமைப்பு இதில் முன்னணியில் நிற்கின்றது. அதன் பணிகள் பல முறை அமெரிக்க ஆட்சியாளர்களால் கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டது. அந்த "அலுவலகத்தின் கடைசி காகிதம்" வரை கண்காணிக்கப்பட்டது. எந்த ஒளிவும் மறைவுமில்லாமல் அரசாங்கத்திடம் அனைத்தையும் காட்டினார்கள். ஆனால் தகவல்கள் சேகரிப்பதில் (Data Collection)கிஞ்சிற்றும் அவர்கள் தளர்வு காட்டிடவில்லை.
அதேபோல் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி(Scrutiny)அதிகார வட்டத்திடம் தருவதிலும் எந்தத் தளர்வையும் காட்டிடவில்லை.
CAIR - இன் அறிக்கைகள் பலவற்றையும் குறிப்பாக, அதன் இஸ்லாமியப் பிரச்சாரம் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை "வளரும் இஸ்லாம் அலறும் ஐரோப்பா" என்ற அட்டைப்படக் கட்டுரையாக வைகறை வெளிச்சம் இதழில் இடம்பெறச் செய்தோம்.
CAIR - என்ற அமெரிக்காவின் இஸ்லாமிய உறவுகளுக்கான குழுமத்தின் அறிக்கைகள் பலவற்றை மையப்படுத்தி, கட்டுரைகள் பலவற்றை "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் ஹஸன் சரூர் என்ற பிரபல்யமான ஆங்கில எழுத்தாளர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் பலவற்றை நான் "வைகறை வெளிச்சம்" இதழில் இடம்பெறச் செய்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!
CAIR ஐ போல் பல தன்னார்வக் குழுக்கள் இதே வேலையைச் செய்து வருகின்றன. இப்படி சேகரித்த தகவல்களை அமெரிக்காவின் அதிகார வட்டத்திற்கு கொண்டு சென்றார்கள். அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொண்டு சென்றார்கள். தன்னார்வலர்கள், மனித உரிமை குழுக்கள், ஊடகங்கள்(Media Houses) அதில் கருத்துக்களைப் பரிமாறிடுவோர் இவர்களின் பார்வைக்கும் கொண்டு சென்றார்கள். ஒரு பெரிய விழிப்புணர்வை அந்த மக்களிடையே வளர்த்தார்கள்.
இந்த சட்டம் என்ன செய்யும்?
இதில் பள்ளிக்கூடங்களில் படித்துத்தரப்படும் பாடங்களில் முஸ்லிம்களின் மீதும், இஸ்லாத்தின் மீதும் எப்படி வெறுப்புகள் வளர்க்கப்படுகின்றன என்பதும் கண்காணிக்கப்படும். வெறுப்புப் பேச்சுகளைப் பேசிடுவதால் ஏற்படும் கலவரங்கள், அதனால் ஏற்படும் சேதங்கள் இவையும் கண்காணிக்கப்படும்.
இது "Islamophobia Innocent" அதாவது இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்ட கலவரங்கள் என்ற தலைப்பின் கீழ் கண்காணிக்கப்படும்.
அமெரிக்காவில் ஏற்கனவே சர்வதேச மத சுதந்திரச் சட்டம் 1998 என்றொன்று இருக்கின்றது. இந்தச் சட்டத்தின் பிரிவு (VIII)102(b)(1)A இன் கீழ் வெளியிடப்படும் வருடாந்திர அறிக்கையில், இந்த இஸ்லாமிய வெறுப்பு குறித்து அறிக்கையும் அங்கம் வகிக்கும். இந்தச் சட்டத்தோடு இஸ்லாமோஃபோபியா சட்டமும் இணைந்து செயல்படும்.
சுருக்கமாகச் சொன்னால் ஆண்டுதோறும் அமெரிக்கா வெளியிடும் மத சுதந்திர அறிக்கையில் இஸ்லாமோஃபோபியா பற்றியவையும் இடம்பெறும்.
A. இதில் இஸ்லாமோஃபோபியாவால் ஏற்படும் வன்முறைகள் பற்றி எந்த அளவுக்கு விபரமாகத் தகவல்கள் சேகரிக்க முடியுமோ அந்த அளவுக்குத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் எனவும் இந்தச் சட்டம் வலியுறுத்துகின்றது.
முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்திடப்படும் வன்முறைகள், அவர்களின் மஸ்ஜித்கள், அவர்களின் சமுதாய நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், கப்ரிஸ்தான் ஆகியவற்றின் மீதும் நடக்கும் தாக்குதல்களும் கண்காணிக்கப்படும்.
மீடியோக்கள் என்ற ஊடகங்கள்
B. ஊடகங்கள் அவை அரசு ஊடகங்களாக இருந்தாலும், தனியார் ஊடகங் களாக இருந்தாலும் அவற்றால் விளம்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு, முஸ்லிம் வெறுப்பு ஆகியவற்றையும் கண்காணிக்க வகை செய்யப்படுகின்றது.
C. அதேபோல் அரசாங்கங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் - முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களை அடக்க எடுக்கும் நடவடிக்கைகள். அதேபோல் இஸ்லாம்/முஸ்லிம்கள் மேல் நடக்கும் வெறுப்புப் பிரச்சாரத்தை முற்றாகத் துடைத்தெறிந்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அவை பற்றிய தகவல்கள்.
D. முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்கள்.
E. அதேபோல் அரசுகள், இஸ்லாத்தின் மீதும்,முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிரான "Anti -Bias" பிரச்சாரங்கள், சகிப்புத்தன்மையை உருவாக்கிடும் கல்வி இவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தால் அவை,பற்றிய விரிவான தகவல்கள்.
முடிவுரை
அமெரிக்கா தன்னை உலகின் தலைவன் என எண்ணிக் கொண்டு தனது செயல்பாடுகளை 1952 முதலே வடிவமைத்து வந்தது. வருகின்றது. ஆனால் உலகிலேயே அதிகமாக போர்களை நடத்தி மனிதர்களைக் கொன்று குவித்த நாடும் அமெரிக்காதான். இதனால் உலகின் மிகப்பெரிய மனித உரிமை ஆர்வலர் நியோம் சோம்ஸ்கி அவர்கள் " Rouge State" என அமெரிக்காவை அழைத்தார். உலகெங்கும் சென்று பிரச்சாரங்களைச் செய்தார்.
இஸ்லாமோஃபோபியாவை உலகெங்கும் உருவாக்கி வியாபிக்கச் செய்ததும் அமெரிக்காதான். இஸ்லாம் வெறுக்கத்தக்க ஒரு கொள்கை. அதை வெறுக்கக் கற்றுக்கொள்ளவில்லை எனில், அது உலகைத் தன்வயப்படுத்திடும். அது நடந்துவிட்டால் மனித உரிமைகளுக்கோ எந்த உத்திரவாதமுமில்லை. இதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. அதேபோல் முஸ்லிம்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள், இல்லையேல் அவர்கள் உலகை அழித்துவிடுவார்கள் எனப் பிரச்சாரம் செய்தது.
தன்னுடைய பொய் பிரச்சாரத்தை உண்மைப்படுத்த அது தனது உளவுத்துறையை ஏவி உலகெங்கும் வெடிக்கச் செய்த குண்டுகள், கொலை செய்த அப்பாவி மக்கள் ஏராளம்,ஏராளம்.
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் குண்டுகள் வெடிக்கும் போதும், அவற்றின் பின்னணியை நாம் நமது வைகறை வாசகர்களுக்குத் தந்துள்ளோம்.
இத்தனை நாளாய் செய்த வினைகளை, ஆப்கானிஸ்தானில் அல்லாஹ்வை மட்டுமே நம்பிநின்ற மக்கள் தந்த அடியினால், உணர்ந்துள்ளது அமெரிக்கா!
NEO. Cons - NEO Conservatives என்ற புதிய பழமைவாதிகள் தந்த அத்தனை திட்டங்களும் வற்றிப்போய் அமெரிக்காவின் இந்த மாற்றம், அதன் இஸ்லாமிய வெறுப்பை காலமெல்லாம் கவனித்தும், படித்துக் கொண்டும், அதனை எதிர்த்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்த நமக்கும், நமது வாசகர்களுக்கும் பேர் அதிர்ச்சி!
இது எத்தனை நாள் நீடிக்கும்?
இந்தச் சட்டம் எத்தனை நாடுகளைத் திருத்தும் என்பவற்றை காலம்தான் கணிக்கவேண்டும்.
அடுத்த நடவடிக்கை!
உலகெங்கும் குண்டுகளை வைத்து அனைத்தத் தரப்பாரையும் கொலை செய்தது. பழியை முஸ்லிம்கள் மீது போட்டது. உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு பெரும் அறிவிப்பைச் செய்தது. அதற்குப் பெயர் (War on Terror) தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனப் பெயர் வைத்தது.
உலகின் எந்தப் பகுதியிலும் ஓரிரு நாடுகள் கூடினால் உடனேயே முதல் வாக்குறுதி, தீவிரவாதத்திற்கு எதிரானதாக இருந்தது. உலகில் நடந்த ஒப்பந்தங்களில் முதல் ஒப்பந்தம் தீவிரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தமாகவே இருந்தது.
இப்படி இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் பழிசுமத்திய அமெரிக்கா இப்போது ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு உணர்ந் துள்ளது. இனி ஒவ்வொரு நாட்டிலும் இஸ்லாமோஃபோபியாவுக்குச் சட்டம் இயற்றிட அமெரிக்கா வகை செய்யவேண்டும்.
இதற்கு முன் தீவிரவாதத்திற்கெதிராக ஒரு சட்டம் வேண்டும் என்பதில் அமெரிக்காவே முன்னணியில் நின்று ஐக்கிய நாடுகள் சபையில் ஓர் தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் உலகின் ஒவ்வொரு முக்கிலும் தீவிர வாதத்திற்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் பொடாவும் (POTA), பின்னர் ஊபாவும் (UAPA) வந்தது.(Prevention of Terrorism Act & Unlawful Activities Prevention Act )
அதுபோல் உலகெங்கும் இஸ்லாமோஃபோபியாவுக்கு ஒரு சட்டம் கொண்டு வர அமெரிக்கா முன்னணியில் நிற்கவேண்டும்.அதை ஐக்கிய நாடுகள் சபை வழி நிறைவேற்றிட வேண்டும்.
படிப்பினை
அமெரிக்க முஸ்லிம்கள் அத்தனை இன்னல்களுக்கிடையேயும் அத்தனை தாக்குதல்களுக்கிடையேயும் அடர்ந்து வந்த சட்டங்களுக்கிடையேயும் தவறாமல் Data Collection என்ற தகவல் சேகரிப்பில் மிகவும் கவனமாக இருந்திருக்கின்றார்கள். சாதித்துமிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களில் 70% பேர் இஸ்லாமோஃபோபியாவுக்கு ஆளாகியுள்ளார்கள். ஆனாலும் தளராமல் தகவல்களை திரட்டி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகளை உலகிலேயே அதிகமாக வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்கொண்டு, அழிவுகளுக்கு ஆட்பட்டு நிற்கும் இந்திய முஸ்லிம்கள் செய்திட முன்வந்திட வேண்டும்.
Jan - 2022 Cover Story by :
MGM
Comments
Post a Comment