Posts

Showing posts from September, 2022

இந்துத்துவவாதிகள் தான் நந்தேத் குண்டுவெடிப்புக்கு காரணம் - ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரின் வாக்குமூலம்

Image
நந்தேத்-இல் உள்ள ஆர்.எஸ்.எஸ்.-ஐ சார்ந்த ஒருவரது வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டுகளை செய்ய பழகிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக குண்டுகள் வெடித்தது. இந்த சம்பவத்தில் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளைச் சார்ந்த பல மூத்த தலைவர்களின் தொடர்பு இருப்பதாக, அந்த அமைப்பின் முன்னாள் மூத்த அதிகாரியான யஷ்வந்த் ஷிண்டே என்பவர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த யஷ்வந்த் ஷிண்டே 25 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ்.-இல் உறுப்பினராக இருந்தவர். மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களொடும் தொடர்பில் இருந்தவர். நந்தேத் குண்டுவெடிப்புக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, VHP - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த ஒரு மூத்த அதிகாரி, நாடு முழுவதும் இப்படி பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான பயிற்சி முகாம்களை பற்றி தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். நந்தேத் குண்டுவெடிப்பு 2006 ஏப்ரல் 4ம் தேதி இரவு நடந்த குண்டுவெடிப்பாகும். இந்த வழக்கை ATS - தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து கைப்பற்றிய சி.பி.ஐ., லக்ஸ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரின் ...