Posts

இந்துத்துவவாதிகள் தான் நந்தேத் குண்டுவெடிப்புக்கு காரணம் - ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரின் வாக்குமூலம்

Image
நந்தேத்-இல் உள்ள ஆர்.எஸ்.எஸ்.-ஐ சார்ந்த ஒருவரது வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டுகளை செய்ய பழகிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக குண்டுகள் வெடித்தது. இந்த சம்பவத்தில் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளைச் சார்ந்த பல மூத்த தலைவர்களின் தொடர்பு இருப்பதாக, அந்த அமைப்பின் முன்னாள் மூத்த அதிகாரியான யஷ்வந்த் ஷிண்டே என்பவர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த யஷ்வந்த் ஷிண்டே 25 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ்.-இல் உறுப்பினராக இருந்தவர். மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களொடும் தொடர்பில் இருந்தவர். நந்தேத் குண்டுவெடிப்புக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, VHP - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த ஒரு மூத்த அதிகாரி, நாடு முழுவதும் இப்படி பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான பயிற்சி முகாம்களை பற்றி தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். நந்தேத் குண்டுவெடிப்பு 2006 ஏப்ரல் 4ம் தேதி இரவு நடந்த குண்டுவெடிப்பாகும். இந்த வழக்கை ATS - தீவிரவாத தடுப்புப் படையிடமிருந்து கைப்பற்றிய சி.பி.ஐ., லக்ஸ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரின் ...

இராஜினாமா - சர்தார் பட்டேல்

Image
  சர்தார் வல்லபாய் பட்டேல்தான் காந்திஜி கொலை செய்யப்படுவதற்கு முன், காந்திஜியைச் சந்தித்த கடைசி மனிதர். அப்போதும்,நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் நடந்த சண்டையைத் தீர்த்து வைத்தார் காந்திஜி. காந்தியின் கடைசி உண்ணாவிரதத்தை வல்லபாய் பட்டேலும், நேருவும் முடித்துவைக்க வந்திருந்தனர். சந்திக்கும்போது கூட காந்திஜி, பிரதமர் நேருவுக்கும் உள்துறை அமைச்சர் (டெபுடி -துணை பிரதம அமைச்சர்) சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் இடையே நடந்த சண்டையைத் தீர்த்து வைத்திட வேண்டியதிருந்தது. பட்டேல், தான் நேருவின் அமைச்சரவையிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். காந்திஜி இப்போது அப்படியொரு இராஜினாமா கூடாது, வேண்டாமென சமாதானப்படுத்தினார்.ஏனெனில் அப்போதுதான் விடுதலைக்குப்பின் முதல் அமைச்சரவை செயலில் வந்திருந்தது. பட்டேல் அவ்விடமிருந்து அகன்ற அரைமணிநேரத்தில் காந்திஜி கொலை செய்யப்பட்டார். காந்திஜியை பட்டேலின் உள்துறை அமைச்சகம் காப்பாற்றிட தவறிவிட்டது, என்று எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். இப்போதும் ஒரு இராஜினாமா கடித மிரட்டல்விட்டார் பட்டேல். ஆனால்...

காந்திஜி கொலையில் குற்றம் சுமத்தப்பெற்றவர்கள்

Image
1. நாதுராம் கோட்சே, வயது 37. ஆசிரியர் - இந்து ராஷ்டிரா பத்திரிக்கை. 2. கோபால் கோட்சே - வயது 27, கோட்சேயின் உடன்பிறந்த சகோதரர். பூனாவிலுள்ள அரசு இராணுவ ஆயுதக் கிடங்கின் காப்பாளர். 3. நாராயண் அப்தி - வயது 34, இந்து ராஷ்டிரா பத்திரிக்கையை நடத்திய "பிரகாசம் லிமிடெட்" கம்பெனியின் இயக்குனர், உரிமையாளர். 4. விஷ்ணு கர்கரே - வயது 37, அஹமத் நகரில் உள்ள ஓர் ஹோட்டல் உரிமையாளர். 5. மடன்லால் பஃஹாவா - வயது 20, அஹ்மத் நகரில் உள்ள அகதிகள் முகாமில் அகதியாக இருந்தவர். 6. ஷங்கர் சிஸ்டாய்யா - வயது 27, வீட்டு வேலைக்காரன்,பூனாவில் வசித்தவர். 7. டாட்டாரியா பார்சூர் -, வயது 49, குவாலியூரில் மருத்துவத்தைத் தொழிலாகச் செய்தவர். 8. விநாயக் சாவர்க்கர் - வயது 65, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்  அதாவது ஆங்கில நாடு சென்று பட்டம் பெற்றவர். தனவந்தர், சொத்துக்களுக்குச் சொந்தக்காரர், மும்பையில் வாழ்ந்து வந்தவர். இன்னும் மூன்று பேர் கங்காதார் காந்த்வந்தி,கங்காதார் ஜாதவ்,சூர்யதேவ் சர்மா ஆகியோர். இவர்கள் கடைசிவரை காவல்துறையிடம் சிக்காமல் தப்பித்து விட்டார்கள். - MGM

ஆப்கானிஸ்தான் முஜாஹித்களும் ரஷ்ய ஆட்சியாளர்களும்!

Image
அன்று ரஷ்யப் பேரரசு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானை அரை நொடியில் கையகப்படுத்தி எங்கள் செங்கொடியைப் பறக்கவிடுவோம் என முண்டா தட்டியது. அன்றைக்கு இருந்த இரண்டு வல்லரசுகளில் ஒன்று ரஷ்யா. அப்போது அது (USSR) United Soviet Socialist Republic ஒன்றிணைந்த சோவியத் பொதுவுடைமை குடியரசு. பத்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் எல்லா கபளீகரங்களையும் செய்தது ரஷ்யா. அப்பாவி மக்களை முடிந்தமட்டும் வேட்டையாடியது. அங்கே அல்லாஹ்வை மட்டுமே நம்பி நின்ற முஜாஹித்கள் தந்த, இழப்புகளைத்தாளாமல் அசிங்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறியது. அப்போது அதாவது 1989 முதல் 1991 வரைக்கும் நடந்த நிகழ்வுகளில், ரஷ்ய வல்லரசு உடைந்தது என்றுதான் வெளி உலகத்திற்குத் தெரியும். ஆனால் அதன் வீழ்ச்சியின் முழு வரலாறும் நமக்கு வந்து கிடைத்திடவில்லை. உண்மைகள் காலம் தாழ்த்தியேனும் வெளியேவரும் என்ற அடிப்படையில், இப்போது சோவியத் ரஷ்யா வீழ்ந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பல தகவல்கள் வெளியே வந்துள்ளன. இதை அன்று ரஷ்யாவின் தோல்விக்குத் தலைமை தாங்கிய, மைக்கே கோர்பசெவ் தனது நினைவலைகளில் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் மிகவும் முக்கியமானது, சோவியத் ரஷ்யாவில...

அமெரிக்காவில் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராகச் சட்டம்

Image
Ilham Omar உலகில் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளில் , பிரச்சாரத்தில் முன்னிலை யில் நிற்பது அமெரிக்கா.  இது ஐரோப்பிய நாடுகளுக்கு தலைமையேற்று நிற்பது வெறும் பிரச்சாரத்தோடு நிற்கவில்லை அமெரிக்கா. பல போர் திட்டங்களை வகுத்து அறிவிக்கப்படாத போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா. இந்தப் போரில் NATO நேட்டோ நாடுகள் எனச் சொல்லப்படும் 57 நாடுகளில் ,51 நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு , இந்தப் பெரும்போரை நடத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்கா! டேவிட் செல்போண் என்பவர் , மூன்றாம் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றது , என தன்னுடைய இஸ்லாத்தோடு சண்டையிட்டுத் தோற்றம்   (Loosing Battle with Islam) என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஆனாலும் அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களை அள்ளிக்கொட்டி , இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை வளர்த்தது.  இதற்காக ஆயிரக்கணக்கான அறக்கட்டளைகள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் இவையெல்லாம் தொடர்ந்து இஸ்லாமோஃபோபியாவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.  அவர்களே ஒத்துக்கொண்டது போல , ஒரு சாதாரண குடிசைத் தொழிலாகத் தொடங்கப்பெற்ற இஸ்லாமோஃபோபியா இப்போது மி...